தேவையான பொருட்கள்
- விப்பிங் கிரீம்
- சர்க்கரை பவுடர்
- பால்
- வெண்ணிலா எசன்ஸ்
செய்முறை
ஒரு கடாயில் 1/2 லிட்டர் பால் சேர்த்து அதனுடன் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாலை கண்டன்ஸ்டு மில்க் பதத்திற்கு காய்ச்சவும்.
மற்றொரு பாத்திரத்தில், 1/2 கப் விப்பிங் கிரீம் சேர்த்து நன்கு பீட் செய்யவும். அதனுடன் தயார் செய்து வைத்துள்ள கண்டன்ஸ்டு மில்க் மற்றும் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர், இதனை ஒரு ஸ்டோரேஜ் பாக்ஸில் ஊற்றி நான்கு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
