தேன் மிட்டாய்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • சர்க்கரை
  • ஃபுட் கலர்
  • தேன்

செய்முறை

500 கிராம் சர்க்கரை, 500 மில்லி தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர், 1/4 ஸ்பூன் ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் 200 கிராம் மைதா, 50 மில்லி தேன், கலந்து வைத்துள்ள தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை கால் இன்ச் தடிமன் அளவிற்கு விரித்துக் கொள்ளவும். சிறிய மூடியை (அல்லது அச்சு) வைத்து சிறிய வட்டங்களாக மாவை வெட்டிக் கொள்ளவும்.

வெட்டி வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும் பின் அதனை சர்க்கரை பாகில் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.

Previous Post Next Post