குடைமிளகாய் சட்னி

தேவையான பொருட்கள்

  • குடைமிளகாய்
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • பூண்டு
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • பச்சை மிளகாய்
  • உளுந்து பருப்பு
  • இஞ்சி
  • எண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, ஆறு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு பச்சை மிளகாய், ஒரு குடைமிளகாய், இரண்டு ஸ்பூன் உளுந்து பருப்பு, மற்றும் ஆறு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும்.

பின், கொத்தமல்லி இலை மற்றும் அரை கப் தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கி இறக்கவும்.

ஆறிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

பின்னர், ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவும்.

Previous Post Next Post