மட்டன் கிரேவி

தேவையான பொருட்கள்

  • மட்டன்
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • தேங்காய்
  • பச்சை மிளகாய்
  • சோம்பு
  • பட்டை
  • மிளகு
  • மஞ்சள் தூள்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மட்டன் மசாலா
  • மிளகாய் தூள்
  • பெரிய வெங்காயம்
  • கறி மசாலா தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

4 ஸ்பூன் எண்ணெய், 50 கிராம் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, மற்றும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

வதங்கி ஆறிய பின், 1/2 கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பின், 1 ஸ்பூன் சோம்பு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பட்டை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, கைப்பிடி கருவேப்பிலை, மற்றும் நான்கு பச்சை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். வதங்கிய பின், ஒரு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

இதனுடன் 400 கிராம் மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் இரண்டு ஸ்பூன் மிளகு சேர்த்து ‌ இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் ஐந்து டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு 40 நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post