வெங்காய சட்னி

தேவையான பொருட்கள்

  • வெங்காயம்
  • தக்காளி
  • தேங்காய்
  • காய்ந்த மிளகாய்
  • கொத்தமல்லி
  • நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • கடுகு

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.

மற்றொரு கடாயில் 100 கிராம் சின்ன வெங்காயம், 1/2 தக்காளி, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, மற்றும் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், 1/2 கப் அளவு துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து அரைக்கவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவும்.

Previous Post Next Post