தேங்காய் பால் சாதம்

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • இஞ்சி
  • பூண்டு
  • சோம்பு
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சைப் பட்டாணி
  • முந்திரி
  • எண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி
  • உப்பு
  • கடுகு
  • பெரிய வெங்காயம்

செய்முறை

ஒரு கப் துருவிய தேங்காய், சிறிதளவு இஞ்சி, 1 பல் பூண்டு, 1 ஸ்பூன் சோம்பு, 2 பச்சை மிளகாய், மற்றும் 1/2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த‌ப் பின் தேங்காய் சாரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் 1 ஸ்பூன் கடுகு சேர்த்து அதனுடன் 2 காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, மற்றும் 1 பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

1 கப் கேரட், பீன்ஸ், மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சாரை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

1 கப் சாதம் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post