வெண்டைக்காய் சில்லி

தேவையான பொருட்கள்

  • வெண்டைக்காய்
  • கறி மசாலா‌ தூள்
  • சாம்பார் பொடி
  • மிளகாய்த்தூள்
  • சில்லி பொடி
  • மஞ்சள் தூள்
  • தனியாத்தூள்
  • எண்ணெய்
  • உப்பு
  • எலுமிச்சை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் சிறிதாக நறுக்கிய 200 கிராம் வெண்டைக்காய், மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.

பின்னர், வறுத்து வைத்துள்ள வெண்டைக்காயுடன் ஒரு ஸ்பூன் தனியாத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் சில்லி பொடி, 1/2 ஸ்பூன் கறி மசாலா‌ தூள், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சிறியதாக நறுக்கி சேர்க்கவும்.

Previous Post Next Post