காலிஃப்ளவர் பொரியல்

தேவையான பொருட்கள்

  • காலிஃப்ளவர்
  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • மிளகாய்த்தூள்

செய்முறை

ஒரு கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1 ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவை வதங்கிய பின் ஒரு சிறிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், 200 கிராம் சிறிய துண்டுகளாக நறுக்கிய காலிஃப்ளவர் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டம்ளர் தண்ணீர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post