உருளைக்கிழங்கு மசாலா பொரியல்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பொட்டுக்கடலை
  • தேங்காய்
  • சோம்பு
  • இஞ்சி
  • பூண்டு
  • தக்காளி
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • கறி மசாலா தூள்
  • மிளகாய்த்தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் பொட்டுக்கடலை, இரண்டு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, ஒரு ஸ்பூன் சோம்பு இதனுடன் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.

உருளைக்கிழங்கை நீளமாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வதக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post