மேகி வெஜிடபிள் சூப்

தேவையான பொருட்கள்

  • மேகி
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • ஸ்வீட் கார்ன்
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு குக்கரில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி சேர்த்து ஒரு கப், 1/2 கப் ஸ்வீட் கார்ன், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை சமைக்கவும்.

பின், வேகவைத்து வைத்துள்ள காய்களுடன் ஒரு பாக்கெட் மேகி சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் மேகி மசாலா பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post