தேவையான பொருட்கள்
- மிளகு
- சீரகம்
- பூண்டு
- சோள மாவு
- மஞ்சள் தூள்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
இரண்டு பல் பூண்டு, 25 கிராம் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அம்மியில் வைத்து இடித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் இடித்து வைத்துள்ள மிளகு பூண்டு சீரகம் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு டம்ளர் தண்ணீர், இரண்டு ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் கரைத்து சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
இறுதியாக தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சேர்க்கவும்.
