உருளைக்கிழங்கு சூப்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • மஞ்சள் தூள்
  • சோளமாவு
  • பூண்டு
  • சீரகம்
  • மிளகு
  • எண்ணெய்
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் 100 கிராம் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கிய பின், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் மிளகு அம்மியில் வைத்து இடித்து சேர்க்கவும்.

இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும், மேலும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சேர்க்கவும்.

Previous Post Next Post