தேவையான பொருட்கள்
- காய்ந்த மிளகாய்
- புளி
- கடலைப்பருப்பு
- பூண்டு
- சீரகம்
- நல்லெண்ணெய்
- கடுகு
- உப்பு
- கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் 10 காய்ந்த மிளகாயை, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, நான்கு பல் பூண்டு, சிறிதளவு புளி, ஒரு ஸ்பூன் சீரகம், மற்றும் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து இதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடங்கள் வறுக்கவும்.
இதை ஆறிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவும்.
