தேவையான பொருட்கள்
- சிக்கன்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- பட்டை
- சோம்பு
- மிளகுத்தூள்
- சிக்கன் மசாலா தூள்
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- தனியா தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி, ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பட்டை, நறுக்கிய பெரிய வெங்காயம் இரண்டு, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய், மற்றும் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
இதனுடன் ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா, மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
