மத்தி மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

  • மத்தி மீன்
  • புளி
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • சோம்பு
  • தேங்காய்
  • தனியா தூள்
  • மிளகாய் தூள்
  • பச்சை மிளகாய்
  • நல்லெண்ணெய்
  • வெந்தயம்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில், ஒரு எலுமிச்சை அளவு புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

புளி கரைசலில் இரண்டு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில், 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1 ஸ்பூன் வெந்தயம், 50 கிராம் சின்ன வெங்காயம், 2 பச்சை மிளகாய், மற்றும் ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், இதனுடன் இரண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கிய பின் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை இதனுடன் சேர்த்து பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் சோம்பு அரைத்து சேர்க்கவும்‌ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இவை கொதிக்க ஆரம்பித்த உடன், 300 கிராம் மத்தி மீன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post