தேவையான பொருட்கள்
- சேமியா
- எலுமிச்சை
- வேர்க்கடலை
- மஞ்சள் தூள்
- பெரிய வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- எண்ணெய்
- கடுகு
- கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் 1 ஸ்பூன் கடுகு, இரண்டு காய்ந்த மிளகாய், 1/2 கப் வேர்க்கடலை, ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், ஐந்து ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து இதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்க தொடங்கியவுடன், 200 கிராம் சேமியா சேர்த்து நன்கு கிளறவும்.
