ரவா கிச்சடி

தேவையான பொருட்கள்

  • ரவை
  • கேரட்
  • பீன்ஸ்
  • பச்சை பட்டாணி
  • முந்திரி
  • தயிர்
  • இஞ்சி
  • பூண்டு
  • பெரிய வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • சோம்பு
  • தக்காளி
  • பச்சை மிளகாய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • நெய்

செய்முறை

ஒரு கடாயில் 250 கிராம் ரவையுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும்.

பின்னர், மற்றொரு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, எண்ணெய்‌ காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு ஒரு ஸ்பூன், ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், ஒரு தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணி மூன்றும் மொத்தமாக ஒரு கப்‌ சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர், 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்களை நன்கு வேக வைக்கவும்.‌ தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து அதனுடன் 1/2 கப் முந்திரி சேர்த்து கிளறவும். ரவை நன்கு வெந்தபின் கொத்தமல்லி இலை மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

Previous Post Next Post