கத்திரிக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய்
  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • தனியாத்தூள்
  • தக்காளி
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, நான்கு காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியாத்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.

200 கிராம் கத்திரிக்காயை நீளமான துண்டுகளாக நறுக்கி இதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கலக்கவும்.

ஒரு கடாயில் 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கத்தரிக்காயை இதில் வைத்து ஃப்ரை பண்ணவும்.

Previous Post Next Post