தேவையான பொருட்கள்
- கொக்கோ பவுடர்
- மைதா
- சர்க்கரை
- சாக்கோ சிப்ஸ்
- வெண்ணெய்
செய்முறை
ஒரு கப் கொக்கோ பவுடர், ஒரு கப் மைதா, ஒரு கப் சர்க்கரை பொடி, மற்றும் ஒரு கப் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை 1/4 இன்ச் அளவிற்கு விரித்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி.
சிறிதாக வெட்டிய துண்டுகளை தட்டில் வைத்து அதன் மேல் சாக்கோ சிப்ஸ் தூவி விட்டு, ஒரு கடாயில் ஒரு கப் உப்பு சேர்த்து அதன் நடுவில் ஸ்டாண்ட் போல ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மீது தட்டை வைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும் அல்லது ஓவனில் வைத்து வேக வைக்கவும்.
