தேவையான பொருட்கள்
- இட்லி
- தக்காளி
- பச்சை மிளகாய்
- சோம்பு
- பெரிய வெங்காயம்
- இஞ்சி-பூண்டு விழுது
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கருவேப்பிலை
- சில்லி பொடி
- கொத்தமல்லி இலை
செய்முறை
நான்கு இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.
ஒரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் சில்லி பொடி, மற்றும் ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர், பொறித்து வைத்துள்ள இட்லியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
