புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்

  • புளி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • காய்ந்த மிளகாய்
  • நல்லெண்ணெய்
  • வெந்தயம்
  • கடுகு
  • உப்பு
  • தேங்காய்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி

செய்முறை

50 கிராம் புளியை, 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், இதனுடன் நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம்‌ சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.

இதனுடன் சிறிதாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்க்கவும்.

தக்காளி நன்கு வதங்கிய பின், கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்க்கவும். 2 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர், 1 கப் அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post