தேவையான பொருட்கள்
- காலிஃபிளவர்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- தேங்காய்
- பச்சை மிளகாய்
- சோம்பு
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
- உப்பு
செய்முறை
ஒரு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, மற்றும் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடங்கள் வதக்க வேண்டும். இதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்கவும். சோம்பு பொறிந்த உடன் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது,நான்கு பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
பின், 200 கிராம் காலிஃப்ளவர் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும். ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். இதனை பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
