தேவையான பொருட்கள்
- சேனைக்கிழங்கு
- பச்சை மிளகாய்
- பெரிய வெங்காயம்
- இஞ்சி-பூண்டு விழுது
- கறி மசாலா தூள்
- சிக்கன் மசாலா
- மஞ்சள் தூள்
- மிளகாய்த்தூள்
- உப்பு
- எண்ணெய்
- கடுகு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சேனைக்கிழங்கை சிறிதாக நறுக்கி 1/2 லிட்டர் தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.
வேக வைத்த சேனைக்கிழங்கில் உள்ள தண்ணீரை வடிகட்டி கிழங்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா, தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு மற்றும் வேக வைத்துள்ள கிழங்கையும் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
