தேவையான பொருட்கள்
- சிக்கன் கிரேவி
- பரோட்டா
- எண்ணெய்
- வாழை இலை
செய்முறை
ஒரு வாழை இலை மேல் ஒரு பரோட்டா வைத்து அதன் மீது ஒரு கப் சிக்கன் கிரேவி சேர்த்து அதன் மேல் மற்றொரு பரோட்டா வைத்து வாழை இலையை நான்கு புறமும் நன்கு மடித்து நூல் வைத்து கட்டவும்.
தயார் செய்து வைத்துள்ள பரோட்டாவை தோசை கல்லில் வைத்து 50 மில்லி எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேக வைக்கவும்.
