சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள்

  • பரோட்டா
  • பெரிய வெங்காயம்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • குடைமிளகாய்
  • மிளகுத்தூள்
  • மிளகாய் தூள்
  • கறி மசாலா தூள்
  • சோயா சாஸ்
  • சில்லி சாஸ்
  • டொமேட்டோ சாஸ்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

இரண்டு பரோட்டாவை சிறிதாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு குடைமிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். ஒரு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சில்லி சாஸ், ஒரு ஸ்பூன் சோயா சாஸ், ஒரு ஸ்பூன் டொமேட்டோ சாஸ், 1/4 ஸ்பூன் உப்பு, 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து இதனுடன் பொரித்து வைத்துள்ள பரோட்டாவையும் சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விடவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

Previous Post Next Post