பரோட்டா

தேவையான பொருட்கள்

  • மைதா
  • முட்டை
  • உப்பு
  • சமையல் சோடா
  • எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 300 கிராம் மைதா மாவு, இரண்டு முட்டை (அல்லது தயிர் ஒரு கப்), தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் சமையல் சோடா, 50 மில்லி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி‌ நன்கு இழுத்து பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்துள்ள பரோட்டா மாவை இரண்டு மணி நேரம் வைத்து, பின் சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து மூன்று மணி நேரம் சிறிய உருண்டைகளின் மேல் எண்ணெய் ஊற்றி வைத்து விடவும், பிறகு மெல்லிசாக அகலமாக விரித்து, விரித்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக சுருட்டி, பின் தேய்த்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post