தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்

  • தக்காளி
  • மிளகு
  • சீரகம்
  • பூண்டு
  • கடுகு
  • பெருங்காயத்தூள்
  • வெந்தயம்
  • பச்சை மிளகாய்
  • எண்ணெய்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

நான்கு தக்காளி உடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். வேகவைத்த தக்காளி ஆறிய பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

பின்னர், ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெந்தயம், நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு பச்சை மிளகாய், மற்றும் ஒரு கைப்பிடி கருவேப்பிலை அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். இவற்றை எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வதங்கிய பின், கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.

Previous Post Next Post