முருங்கைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை
  • அரிசி மாவு
  • பூண்டு
  • மிளகு
  • சீரகம்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில் ஒரு கப் முருங்கைக் கீரை, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின், இரண்டு டம்ளர் தண்ணீர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இதை இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.

ஒரு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் நான்கு ஸ்பூன் மிளகு அம்மியில் வைத்துத் தட்டிச் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

Previous Post Next Post