தேவையான பொருட்கள்
- மாங்காய்
- பொன்னி அரிசி
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- புதினா
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
- சோம்பு
- பட்டை
- கறி மசாலா தூள்
செய்முறை
ஒரு குக்கரில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு, பிரியாணி இலை, ஒரு பட்டை சேர்த்து சோம்பு பொரிந்த உடன் ஒரு பெரிய வெங்காயம், ஆறு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். இவை வதங்கிய பின், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, இரண்டு பொடியாக நறுக்கிய மாங்காய் சேர்த்து வதக்கவும்.
பின், இரண்டு கப் பொன்னி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து சேர்க்கவும். இதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும்வரை சமைக்கவும்.
