தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- சிக்கன் குழம்பு
- முட்டை
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- மிளகுத்தூள்
- மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா பொடி
- எண்ணெய்
- உப்பு
- கடுகு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து கடுகு பொரிந்த உடன், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிதாக நறுக்கிய தக்காளி ஒன்று சேர்த்து வதக்கவும்.
ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து கலந்து விடவும்.
இரண்டு முட்டை சேர்த்து நன்கு பொரித்துக் கொள்ளவும்.
இரண்டு சப்பாத்தியை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கவும் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இறுதியாக ஒரு கப் சிக்கன் குழம்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
