தேவையான பொருட்கள்
- நண்டு
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- இஞ்சி
- மிளகு
- பூண்டு
- சீரகம்
- கொத்தமல்லி
- மிளகாய் தூள்
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு குக்கரில் நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், இரண்டு பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
சிறிதளவு இஞ்சி, நான்கு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் கொத்தமல்லி, நான்கு ஸ்பூன் மிளகு வைத்து அம்மியில் தட்டி சேர்க்கவும்.
பின்னர், 500 கிராம் நண்டு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், நான்கு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் வரும் வரை சமைக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சேர்க்கவும்.
