ஆட்டு நெஞ்செலும்பு சூப்

தேவையான பொருட்கள்

  • நெஞ்செலும்பு
  • பெரிய வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • இஞ்சி-பூண்டு விழுது
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • கறி மசாலா தூள்
  • சிக்கன் மசாலா தூள்
  • மிளகுத்தூள்
  • சீரகத்தூள்
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை
  • உப்பு

செய்முறை

ஒரு குக்கரில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர், ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் 300 கிராம் ஆட்டு நெஞ்செலும்பை சேர்த்து ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து பத்து நிமிடம் வதக்கவும்.

இதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஆறு விசில் விடவும்.

இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சேர்க்கவும்.

Previous Post Next Post