தேவையான பொருட்கள்
- முட்டை
- பூண்டு
- மிளகு
- சீரகம்
- பச்சை மிளகாய்
- எண்ணெய்
- சோள மாவு
- மஞ்சள் தூள்
செய்முறை
நான்கு முட்டையை வேகவைத்து மஞ்சள் கருவை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய், சிறிதாக வெட்டி வைத்துள்ள முட்டை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வறுக்கவும்.
இரண்டு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் மிளகு, இரண்டு பல் பூண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அம்மியில் வைத்து தட்டி சேர்க்கவும்.
இதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இதனை ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
