தேவையான பொருட்கள்
- ஆட்டுக்கால்
- சின்ன வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- இஞ்சி
- பூண்டு
- சீரகம்
- மிளகு
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
- கருவேப்பிலை
செய்முறை
ஒரு குக்கரில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பத்து சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கு ஸ்பூன் மிளகை தட்டி சேர்க்கவும். மேலும், இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிய துண்டுகளாக வெட்டிய நான்கு ஆட்டுக்கால்கள் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
