மசாலா தோசை

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • பெரிய வெங்காயம்
  • மஞ்சள் தூள்
  • பச்சை மிளகாய்
  • கறி மசாலா தூள்
  • மிளகாய்த்தூள்
  • உப்பு
  • கடுகு
  • தோசை மாவு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்

செய்முறை

300 கிராம் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, சிறியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, இரண்டு பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

ஒரு ஸ்பூன் கறி மசாலா‌ தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், இதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலை போடவும்.

தோசை கல்லில் தோசை ஊற்றி அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து தோசையை மடித்து திருப்பி போடாமல் வேக வைக்கவும் இதனுடன் தோசைக்கு தேவையான அளவு எண்ணெயும் சேர்க்கவும்.

Previous Post Next Post