பூசணிக்காய் அல்வா

தேவையான பொருட்கள்

  • பூசணிக்காய்
  • சர்க்கரை
  • நெய்
  • எண்ணெய்
  • கேசரி பவுடர்
  • ஏலக்காய்‌ பொடி
  • முந்திரி

செய்முறை

200 கிராம் துருவிய பூசணிக்காய் மற்றும் 1/4 ஸ்பூன் கேசரி பவுடர் ஒரு கடாயில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

200 கிராம் சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும்.

இடையில் கொஞ்சம் கொஞ்சமாக நெய்(மொத்தம் 50 மில்லி) மற்றும் எண்ணெய் (மொத்தம் 50 மில்லி) சேர்க்கவும்.

நன்கு இறுகி வந்தபின், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, மற்றும் 1/2 கப் முந்திரி சேர்த்து நன்கு கிளறி விடவும்.

Previous Post Next Post