தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி இலை
- பச்சை மிளகாய்
- கடுகு
- பூண்டு
- சீரகம்
- இஞ்சி
- கடலைப்பருப்பு
- பெருங்காயத்தூள்
- எண்ணெய்
- கருவேப்பிலை
- பெரிய வெங்காயம்
- உப்பு
செய்முறை
முதலில், ஒரு கப் அளவிற்கு கொத்தமல்லி இலை, இரண்டு பச்சை மிளகாய், சிறிய அளவு இஞ்சி, 8 பல் பூண்டு, மற்றும் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் 1 ஸ்பூன் அளவு கடுகு மற்றும் கடலைப்பருப்பு சேர்க்கவும்.
கடுகு பொறிந்தவுடன், ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து அதனுடன் 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுது சேர்க்கவும்.
2 கப் சாதம் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
