கேரட் சாதம்

தேவையான பொருட்கள்

  • கேரட்
  • பெரிய வெங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • கடலைப்பருப்பு
  • வேர்க்கடலை
  • இஞ்சி
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி

செய்முறை

ஒரு கடாயில் 50 மி நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் 1 ஸ்பூன் கடுகு சேர்த்து, கடுகு பொறிந்தவுடன் 2 ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை, 25 கி வேர்க்கடலை, 1 பெரிய வெங்காயம், 4 காய்ந்த மிளகாய், மற்றும் சிறிய அளவு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், 200 கி துருவிய கேரட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

1 கப் சாதம் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

Previous Post Next Post