தேவையான பொருட்கள்
- முட்டை
- தோசை மாவு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கொத்தமல்லி இலை
- மிளகாய்த்தூள்
- மிளகுத்தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
தோசை கல்லில் மெல்லிசாக தோசை ஊற்றி மேல் ஒரு முட்டையை நன்கு கலந்து அதன் மேலே ஊற்றவும்.
தோசை மேல் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், மற்றும் 1/4 ஸ்பூன் உப்பு தூவி விடவும்.
தோசையை நன்கு வேக வைத்து மடித்து எடுக்கவும்.
