தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- வெந்தயம்
- பச்சரிசி
- ஜவ்வரிசி
- உப்பு
செய்முறை
நான்கு டம்ளர் இட்லி அரிசி, ஒரு டம்ளர் பச்சரிசி, 50 கிராம் ஜவ்வரிசி, 25 கிராம் வெந்தயம், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
ஊறவைத்த அரிசியை அரைக்கவும். அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நான்கு ஸ்பூன் புளித்த இட்லி அல்லது தோசை மாவு சேர்க்கவும். அரைத்த மாவை எட்டு மணி நேரம் கழித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.
