பெப்பர் இட்லி

தேவையான பொருட்கள்

  • இட்லி
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • இஞ்சி
  • பூண்டு
  • பச்சை மிளகாய்
  • மிளகுத்தூள்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • கடுகு
  • கருவேப்பிலை
  • உப்பு
  • கொத்தமல்லி இலை

செய்முறை

நான்கு இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதாக நறுக்கிய இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன், மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின்னர், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் ஒரு சிறிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், துண்டுகளாக வெட்டி வைத்துள்ள இட்லியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post