சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • இஞ்சி-பூண்டு விழுது
  • பெரிய வெங்காயம்
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • சிக்கன் மசாலா பொடி
  • சீரகத்தூள்
  • மிளகுத்தூள்
  • பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை

ஒரு குக்கரில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு சிறிய தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும்.

பின்னர், 300 கிராம் எலும்புடன் உள்ள சிக்கன், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.

நான்கு டம்ளர் தண்ணீர், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சீரகத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு விசில் விடவும்.

இறுதியாக ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

Previous Post Next Post