தேவையான பொருட்கள்
- அரிசி
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- இஞ்சி
- பூண்டு
- பச்சை மிளகாய்
- சோம்பு
- பட்டை
- ஏலக்காய்
- உப்பு
- எண்ணெய்
- புதினா
- கொத்தமல்லி
- கருவேப்பிலை
- நெய்
செய்முறை
குக்கரில் 50 மி எண்ணெய் மற்றும் 50 மி நெய் சேர்க்கவும். எண்ணெய் மற்றும் நெய் காய்ந்ததும் சிறிதளவு இஞ்சி, 4 பல் பூண்டு, 1 ஏலக்காய், 1 ஸ்பூன் சோம்பு சிறிதளவு பட்டை, மற்றும் 6 பச்சை மிளகாயை அம்மியில் வைத்து தட்டி சேர்த்து வதக்கவும்.
பின், அதனுடன் 1 பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும், உடன் ஒரு கைப்பிடி அளவு புதினா சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் 1/2 மணி நேரம் ஊற வைத்த 2 கப் அரிசி சேர்த்து அதனுடன் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். 2 விசில் வந்தவுடன் இறக்கவும். பின் கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும்.
