தேவையான பொருட்கள்
- ஓரியோ பிஸ்கட்
- முட்டை
- மைதா
- கொக்கோ பவுடர்
- சர்க்கரை பவுடர்
- எண்ணெய்
- பேக்கிங் பவுடர்
செய்முறை
20 ஓரியோ பிஸ்கட்டில் இருந்து கிரீமை மட்டும் தனியாக எடுத்து விடவும்.
க்ரீம் நீக்கிய 20 ஓரியோ பிஸ்கட், ஒரு முட்டை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் 1/2 கப் கொக்கோ பவுடர், 1/2 கப் மைதா, ஒரு கப் சர்க்கரை பவுடர், ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் 50 மில்லி எண்ணெய் சேர்க்கவும்.
இதனை நன்கு கட்டி இல்லாமல் கலந்து ஓவன் அல்லது குக்கரில் வைத்து வேக வைக்கவும். கேக் வெந்த பிறகு முன்பே எடுத்து வைத்திருந்த கிரீமை அதன் மேல் உருக்கி சேர்க்கவும்.
