மரவள்ளி கிழங்கு சப்பாத்தி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • மைதா
  • மரவள்ளி கிழங்கு
  • தயிர்
  • மிளகாய் தூள்
  • சமையல் சோடா
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, 1/2 கப் வேக வைத்து மசித்த மரவள்ளி கிழங்கு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 கப் தயிர், 1/2 ஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.

பின், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post