மரவள்ளி கிழங்கு மசாலா பூரி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • ரவை
  • மரவள்ளி கிழங்கு
  • தயிர்
  • சமையல் சோடா
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் கோதுமை மாவு, நான்கு ஸ்பூன் ரவை, 1/2 கப் வேக வைத்து மசித்த மரவள்ளி கிழங்கு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு உப்பு, 1/4 கப் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் வைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post