தேவையான பொருட்கள்
- இட்லி
- தயிர்
- கடுகு
- கடலைப்பருப்பு
- இஞ்சி
- பால்
- பச்சை மிளகாய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- மிக்சர்/பூந்தி
- எண்ணெய்
செய்முறை
ஐந்து இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு கப் தயிர், 1/4 கப் காய்ச்சிய பால், வெட்டி வைத்துள்ள இட்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு மற்றும் 1/4 கப் மிக்சர்/பூந்தி மேலே தூவி விடவும்.
