தேவையான பொருட்கள்
- உளுந்து வடை
- தயிர்
- கடுகு
- உப்பு
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- எண்ணெய்
- பூந்தி
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
நான்கு உளுந்து வடை எடுத்து ஒவ்வொரு வடையையும் நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு கப் தயிர், உளுந்து வடை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக, சிறிதளவு பொடியாக நறுக்கி கொத்தமல்லி இலை மற்றும் 1/4 கப் பூந்தி சேர்க்கவும்.
