தேவையான பொருட்கள்
- பீட்ரூட்
- மிளகாய் தூள்
- சீரகம்
- கொத்தமல்லி இலை
- இட்லி மாவு
- உப்பு
செய்முறை
தோல் சீவி பொடியாக நறுக்கிய ஒரு பீட்ரூட், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின், ஒரு கப் இட்லி மாவுடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட்டை கலந்து இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.
