தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- புளி
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- காய்ந்த மிளகாய்
- சாம்பார் தூள்
- மிளகாய் தூள்
- கடுகு
- சீரகம்
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், பத்து சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், ஒரு சிறிய தக்காளி மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
200 கிராம் கத்திரிக்காய், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
1/4 கப் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். இறுதியாக, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
